சசிகலா மட்டும் கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவரது குடும்பமே கட்சியை நடத்துகிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சகிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனிடையே அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருந்து வருகிறேன். அதனால் தான் கட்சியை காப்பற்றனும் என்ற நோக்கத்தோடு வெளியேறினேன், அதிமுகவுக்காக 49 வழக்குகளை சந்தித்துள்ளேன். நியாயம் நடக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பொறுந்திருந்து பாருங்கள் என்றார்.







