அதிக டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும்: முஷ்பிகுர் ரஹிம்!

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

வங்காளதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் அளித்த பேட்டியில், ‘நான் 11 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எங்களுக்கு அதிக அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஒரு ஆண்டில் எப்போதாவது ஒரு முறை தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறோம்.

எங்களுக்கு சரியான டெஸ்ட் போட்டி வாய்ப்பு கிடைக்காத நிலையில் எங்களது ஆட்டம் சரியானதாக இல்லை என்று விமர்சிப்பது நியாயமற்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டியில் தொடர்ந்து விளையாடினால் தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். நிறைய போட்டிகளில் ஆடினால் தான் ஆட்டத்தில் முன்னேற்றம் காண முடியும்.

நல்ல பார்மில் இருக்கும் விராட்கோலி, அஸ்வின் ஆகியோர் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் மட்டுமின்றி புஜாரா, லோகேஷ் ராகுல், கருண்நாயர் உள்பட சிறந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். அத்துடன் நல்ல பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்’ என்று கூறினார்.