பாகிஸ்தானின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காலை சுமார் 3:03 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் கடற்கரை பகுதியான பஸ்னிக்கு தென்மேற்கு பகுதியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உண்டானதாக புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் எதிரொலி இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானியர்கள் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.