முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்.பியான மனோஜ் பாண்டியன். அவர் கூறுகையில்,
ஆட்சியை கலைத்துவிட்டு அதிகாரத்தை பிடிக்க சசிகலாவும் அவரது உறவினரும், திட்டமிட்டதை அறிந்து, ஜெயலலிதா அவர்களை கட்சியிலிருந்து நீக்கினார். அப்போது என்போன்ற விசுவாசிகள் மகிழ்ந்தோம்.
ஆனால் மீண்டும் சசிகலாவை மட்டும் வீட்டுக்குள் வர ஜெயலலிதா அனுமதித்தார். அப்போது நாங்கள் கவலையடைந்தோம். எங்களை பார்த்து “நான் உதவியாளர் தேவை என்பதற்காகவே சசிகலாவை வீட்டுக்கு அழைத்துள்ளேன். எந்த காலத்திலும் இவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். கவலைப்பட வேண்டாம்” என்றார். அப்போதுதான் நாங்கள் நிம்மதியடைந்தோம்.
சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியபோது, சோ, நான் ஜெயா டிவி நிர்வாகத்தில் பணியமர்த்தப்பட்டோம். அப்போது, ”
மேலும், அதிமுக சட்ட விதி 19 (8) கீழ், பொதுக்குழு கொள்கைகள் தொண்டர்களை கட்டுப்படுத்தும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராகதான் நியமிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.







