இலங்கை – இந்தியாவை இணைக்க வீதி அவசியம்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீதி இணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின்போது இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை இலகுவாக மேற்கொள்வதற்கு, இலங்கை – இந்தியாவுக்கு இடையில் வீதி இணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தலைமன்னாரையும் இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் வீதி இணைப்பு மேற்கொள்ளப்படுமாயின், இந்திய முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை இலகுவாக இலங்கையில் மேற்கொள்வர் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.