இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த அத்துமீறல்கள் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய மீனவர்களை கைதுசெய்தமை மற்றும் பிடிக்கப்பட்ட படகுகளை மீண்டும் கையளிக்காமை என்பனவே இதற்கான காரணங்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு முதல் இந்திய மீனவர்களின் 100க்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.