பிளாஸ்டிக் பயன்படுத்த தடை : யாழ். மக்களே எச்சரிக்கை!!

பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 82 ஆவது தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது.

இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மைக்ரோன் அளவிற்கும் குறைவான தடிப்பை கொண்ட பிளாஸ்டிக் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது.

குறித்த சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் 2 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் குறித்த சட்டம் வடக்கில் அமுலாக்கப்படாத நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்திடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என வடக்கு மாகாண அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.