ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது, உறவினர்கள் அனைவரும் சேர்ந்து, அவருடைய வாயில் தண்ணீர் அல்லது பாலை ஊற்றுவார்கள்.
இவ்வாறு பின்பற்றப்படும் பழக்கவழக்கத்தை நம்மில் உள்ள அனைவருமே அறிந்திருப்போம் அல்லவா?
ஆனால் அப்படி மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவருடைய உயிர் பிரியும் நேரத்தில் ஏன் தண்ணீரை கொடுக்கின்றோம் என்பது உங்களுக்கு தெரியுமா?
மரணப்படுக்கையில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது ஏன்?
நமது வாழ்வில் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கதிற்கு பின் ஒவ்வொரு அர்த்தங்கள் ஒளிந்திருக்கும். அவற்றில் ஒருசில விஷயங்களுக்கு ஆன்மீகங்களும் காரணமாக இருக்கிறது.
அந்த வகையில், குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பிஷ்மரின் தந்தை அவருடைய மகன் சந்தனுக்கு எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார் என்று ஒரு வரமளித்தார்.
போரில் பத்தாம் நாளன்று பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்.
அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டு தான் இறக்க வேண்டும் என்று நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன், தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் ஒரு அம்பை எய்தினார். போர் புரிய விரும்பாத பீஷ்மர் மீது அந்த அம்புகள் பாய்ந்து, அவரது உடலை துளைத்தது.
உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
அப்போது அவரைத் தரிசிக்கவும், ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தார்கள்.
அப்போது மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மர் அதிக களைப்பு மற்றும் தாகத்தை உணர்ந்ததால், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.
அதற்காக துரியோதனன் மற்றும் கர்ணன் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் பீஷ்மர் அதை அருந்தாமல், அர்ஜூனனை நோக்கி தண்ணீர் தருவாயாக என்று கேட்டார்.
அப்போது அர்ஜூனன் தனது காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவியதால், பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை, நீராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. அதை குடித்த பீஷ்மர் தாகம் தணிந்தார்.
எனவே பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவரது தாயினால் தாகம் தணிந்தது.
இதனால் தான் இன்றும் அளவும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் தண்ணீர் கொடுக்கும் பழக்கம் பின்பற்றி வருகிறது.








