சசிகலா ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க சார்! கண்ணீர் விட்ட ஓ.பி.எஸ்: சாட்டையை எடுக்கும் மோடி

மன்னார்குடி கோஷ்டி தன்னை முதல்வர் எனவும் பார்க்காமல் அவமானப்படுத்தி வருவதாக ஓ.பி.எஸ் பிரதமர் மோடியிடம் குமுறியுள்ளதாக கிசுகிசுக்கபடுகிறது.

தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர் வேலையை செய்ய விடாமல் மன்னார்குடி கோஷ்டி தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக ஆகிவிட்ட சசிகலா அடுத்து முதல்வராக கட்சியின் சீனியர்களை விட்டு ஓ.பி.எஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிரஷர் கொடுப்பதாக கூறப்படுகிறது.

அதே போல, சமீபத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், மேடையில் இருக்கை ஒதுக்காமல், முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டத்தோடு கூட்டமாக அமரவைக்கப்பட்டு சசிகலாவால் அவமானப்படுத்தப்பட்டார்.

ஜெயலலிதா இருக்கும் போது, அதிமுக சார்பாக நடைபெறும் கூட்டங்களில் அவருக்கு அருகில் பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்படும், ஆனால் சசிகலா தரப்பு வேண்டுமென்றே இப்படி செய்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஓ.பி.எஸ் பிரதமரிடம் இதுபற்றி கூறி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியும் இது குறித்து அக்கறை கொண்டதோடு, தற்போது மன்னார்குடி தரப்புக்கு எதிராக கடுமையை காட்டி எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.