நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசித்து வந்த மதபோதகர் முகமது பெல்லோ அபுபக்கர் தனது 93 வயதில் காலமானார். அவருடைய மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பிணிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள பிடா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் மதபோதகராக இருந்து வந்தார். இவர் மக்களால் பாபா என அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு 100க்கும் மேற்பட்ட மனைவிகளும் 200க்கும மேற்பட்ட பிள்ளைகளும் உள்ளனர்.
அதிக பெண்களை மணம் செய்துக்கொண்ட இவர் குரான்படி எத்தனை பெண்களை வேண்டுமானலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனாலேயே இவர் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் சனிக்கிழமை வீட்டிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக பணியை முடித்துவிட்டேன் இதுதொடர்பாக சனிக்கிழமை நைஜீரீய செய்தி ஏஜென்சிக்கு தகவல் தெரிவித்த, மதபோதகர் பெலோவின் உதவியாளர் முத்தைரு சலாவுதின் பெலோஇ தனது முதலாளி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
கடைசியாக அவரிடம் பேசிய மதபோதகர் பெல்லோ, நான் என்னுடைய தெய்வீக பணியை முடித்துவிட்டேன். என்னை படைத்தவனை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியதாகவும் உதவியாளர் சலாவுதின் தெரிவித்துள்ளார்.
பெண்களை திருமணம் செய்வதே தெய்வீக பணி பெண்களை திருமணம் செய்வதையே மதபோதகர் பெல்லோ தெய்வீக பணியாக தெரிவித்து வந்துள்ளார்.
அவருடைய இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பலமுறை இறந்ததாக வதந்திகள் இதற்கு முன்னரே பலமுறை பெல்லோ இறந்துவிட்டதாக வதந்திகள் பரவி இருக்கின்றன.
அதனை நம்பி நைஜீரிய நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. நம்பாத செய்தி நிறுவனங்கள் இந்நிலையில் பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெல்லோவின் இறுதிச்சடங்கில் ஏராளமான மக்கள் பெரும் கூட்டமாக கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அவர் உயிரிழந்த தகவலை செய்தி நிறுவனங்கள் உறுப்படுத்தியுள்ளன. கர்ப்பிணி மனைவிகள் பெல்லோ 130 மனைவிகள் மற்றும் 203 குழந்தைகளை கைவிட்டு சென்றுள்ளார்.
பல்வேறு தரப்பைச் சேர்ந்த அவரது மனைவிகளில் சிலர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. விருப்பத்துடன் திருமணம் மத போதகராக திகழந்து வந்த பெல்லோ தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து, பின்னர், அவர்கள் விருப்பத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







