மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்லவிருப்பதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியல் பொது வாழ்க்கையில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் குறித்த தனது முடிவை ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
தீபாவின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்னர் தினமும் கூடி வருகின்றனர். அவர்கள் மத்தியில் அடிக்கடி தீபாவும் பேசி வருகிறார்.
இந்நிலையில், கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் எப்போது போயஸ் கார்டன் செல்வீர்கள் என கேட்க்க அதற்கு பதிலளித்த தீபா கூறியதாவது,
ஜெ.தீபா, நான் போயஸ் கார்டனுக்கு செல்வது தொண்டர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.
இதனையடுத்து தீபா ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்ல தயாராக இருப்பதால் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவின் ஒரு பிரிவினரும் உற்சாகமடைந்துள்ளனர்.
முன்னதாக, போயஸ் கார்டன் இல்லம் எனது பாட்டி வாங்கிய சொத்து. அதன் உண்மையான வாரிசு நான் தான். அதில் இருக்க சசிகலாவுக்கு உரிமை இல்லை என கூறியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.







