முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நுகோகொடயில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் பேரணிக்கான செலவு பட்டியலை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த பேரணியின் ஏற்பாட்டளார் ஒருவர் ஊடாக இந்த செலவு தொடர்பில் தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பேரணியின் முழுமையான செலவாக ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மதுபானத்திற்கு மாத்திரம் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெருமளவானோர் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மதுபானத்திற்கும் சாப்பாட்டுக்கும் ஆசைப்பட்டு பேரணியில் கலந்து கொண்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.