ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அந்தவரிசையில் இன்று கொண்டாடப்படும் பெண் குழந்தைகள் தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ”ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி நம்மைப் பெருமைப்படுத்தும் பெண் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடும் விழா. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டினை கட்டாயம் கைவிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்புகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.







