ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

6-ம் நாளான இன்று பெண்கள் ஒன்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டை சேர்ந்த நிகோல் ஜிப்சை எதிர்கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். செரீனா 4-வது சுற்றில் செக்குடியரசு வீராங்கனை பார்போரா ஸ்டிரிகோவாவுடன் மோதுகிறார்.

3-வது சுற்றில் பார்போரா ஸ்டிரிகோவா 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் கார்ஜிபாலை (பிரான்ஸ்) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 4-வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சுடன் மோதும் ஆட்டம் சவாலாக இருக்கும்.

ஸ்டிரிகோவா பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

6-ம் நிலை வீராங்கனை சிபுல்சோவா (சுலோ வாக்கியா) 30-ம் நிலை வீராங்கனை மகரோவா (ரஷியா) மோதினர்.

இதில் மகரோவா 6-2, 6-7 (3-7), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-வது சுற்றில் ரஷியாவின் ஏலினா லஸ்ஸினா தோற்றார். அவரை அமெரிக்காவின் ஜெனிபர் பிரட்டி 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் சோபின் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியா வீரர் கார்சோலிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆஸ்திரியா வீரர் டோமினிக் தீம் 6-1, 4-6, 6-4, 6-7 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனோயட் பேரை வீழ்த்தினார்.