சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம் விண்ணை முட்டுகிறது. பல்வேறு கோஷங்களை அந்த இளம் பெண் எழுப்ப, அருகே நிற்கும் தோழிகளும் அதற்கு பதிலாக கோஷமிடுகிறார்கள்.
கருப்பு சுடிதார் அணிந்துள்ள அந்த இளம் பெண் வார்த்தையை, ஏற்ற இறக்கம் செய்து கோஷமிடும் காட்சி பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. மிகவும் உணர்ந்து, உணர்வுப்பூர்வமாக அந்த பெண் கோஷமிடுகிறார்.
அதிலும், சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று கோஷமிடும்போது அந்த பெண் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை பார்த்தால் ஓ.பி.எஸ் உடனே மெரினா பீச் வந்து குறைகளை கேட்க தொடங்கிவிடுவார். நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்.