ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் தீயாய் தகிக்கும் போராட்ட களத்தில் பல்வேறு தரப்பினரும் தாங்களாக முன்வந்து இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தீவிரமடைந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் முழு அடைப்பு போராட்டமாக மாறுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது, ஜல்லிக்கட்டு நடத்த கோரி இன்று லாரிகள் மற்றும் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் திரையரங்குகளிலும் பகல் மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சார ஊழியர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொ.மு.ச, சிஐடியு, ஏஐடியுசி, பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்டவை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தையே உலுக்கி வரும் இந்த போராட்டத்திற்கு தற்போது முதல் வெற்றி கிடைத்துள்ளது, இது உலகதமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம்.
ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவரச சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறியுள்ளார்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.
பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பை மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.
இருப்பினும் வாடிவாசல் திறந்து, அதனுள் இருந்து காளைகள் சீறிப்பாயும் காட்சியை பார்க்கும் வரை நாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.