நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஹொப்பர் என்ற அமெரிக்க கடற்படை கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல், இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் வரவேற்க்கப்பட்டது.
இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.