இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கு 1878 கோடியே 25 இலட்ச ரூபா (125 மில்லியன் அமெரிக்க டொலர்) கடனான வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை கீழ் வருமாறு,
வணிக மற்றும் ஏற்றுமதி சார் காய்கறி மற்றும் பழ உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியை தொடர்ச்சியான பேணுவதற்கும் இந்த கடன் வழங்கப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கவும் இதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த கடன் தொகையானது நாட்டின் விவசாய கொள்கையை அபிவிருத்தி செய்யவும், எதிர்காலத்தில் திட்டங்களை தீர்மானிக்கவும் உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் விவசாயத்துறையை மேலும் செயற்றிறன்மிக்கதாக மாற்றியமைப்பதை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன சந்தை மற்றும் நுகர்வோரின் தேவை காலநிலை மற்றும் சூழலின் தன்மைக்குறே்ற வகையில் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான இயக்குனர் மற்றும் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் இந்த கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.