ஓரின சேர்க்கை திருமணம் தொடர்பான யோசனையை அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அதற்கு எதிர்ப்பையே தெரிவிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் குறித்த நிபந்தனைகளை நாம் விரிவாக ஆராய்ந்துள்ளோம் அவற்றை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஓரினச்சேர்க்கை தொடர்பான யோசனையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதினால் அதை நீக்குமாறு நாம் கோரியுள்ளோம்.
இன மத ரீதியிலான திருமண நடைமுறை நாட்டில் உண்டு என்று மனிதஉரிமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு நாம் விளக்கமளித்துள்ளோம்.
ஓரினச்சேர்க்கை தொடர்பான யோசனையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். ஐரோப்பியாவில் சில நாடுகளும் இதனை எதிர்க்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.