தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்! சசிகலாவின் பிடியில் ஓபிஎஸ்?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

ஒருநாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்பதை நிரூபிக்கும் விதமாக திரண்டு வந்துள்ள இளைஞர்கள் கூட்டத்தால் தமிழ்நாடே ஸ்தம்பித்துள்ளது.

மூன்று நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் தண்ணீர், சாப்பாடு ஏதுமின்றி போராடும் இளைஞர்களை பார்க்கும் போது மெய்சிலிர்த்து போகின்றது.

பாரம்பரியத்தை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உணர்வும், தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.

ஆனால் மக்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம் என கூறிக்கொண்டிருக்கும் ஓபிஎஸ் அரசு எங்கே சென்றது?

இவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றார்களா? உண்மையிலேயே மக்களுக்காக தான் இந்த அரசு இருக்கின்றதா?

சசிகலாவின் கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கிறாரா ஓபிஎஸ்?

ஜெயலலிதா இறந்த பின்னரே அதிமுக உடைவது உறுதி என பேசப்பட்டது, தற்போதைய நிலையை பார்த்தால் அதிமுக-வே இருக்காது.

மூன்று நாட்களாக போராடும் மக்களின் குரல் ஓபிஎஸ் காதில் விழவில்லையா?

இது ஒரு ஜனநாயக நாடா என்பதே கேள்விக்குறியாக உள்ளது? மக்களாட்சி என்ற பெயரில் தமிழக அரசின் இப்படியான அராஜகங்கள் நிச்சயம் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.