பீட்டா அமைப்புக்கு தடை விதிப்பதே தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களோட கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்காக அல்ல.
தமிழர்களோட அடையாளம் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எதையும் எதிர்பாராமல் அரசியல் தூண்டல் இல்லாமல் தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழன் என்ற உணர்வோடு போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன். போராட்டத்திற்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் தமிழகமே சந்தோஷப்படும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.







