விஜய் ரசிகன் அடித்துக் கொலை! உண்மைகள் அம்பலமானது!!

250 ரூபாய் பணத்திற்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வெளியான பைரவா படத்திற்காக விஜய்யின் ரசிகர்கள் காஞ்சீபுரத்தில் உள்ள திரையரங்கில் கட் அவுட் வைத்து அலங்கரித்துள்ளனர்.

இதனை மேற்பார்வையிடுவதற்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் இமயம் ரவி சென்றுள்ளார்.

அங்கு தனது பணியினை முடித்துவிட்டு, காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியின் வழியாக பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 குடிகார நபர்கள் ரவியிடம் பிரச்சனை செய்து அவரை அடித்து உதைத்துள்ளனர்.

இதில், அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்த 250 ரூபாய் மற்றும் அவரின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அவரது உடலை பாலாறு ஆற்றில் வீசியுள்ளனர்.

ஆற்றில் வீசப்பட்ட இவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இந்நிலையில் இவரின் சடலம் ஆற்றில் மிதந்து கிடப்பது பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இவரிடம் கொள்ளையடிப்பதற்காக சீனிவாசன்(26), அப்பு(19) மற்றும் பாபு(23) ஆகிய 3 பேரும் இந்த பாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தற்போது, இவர்கள் 3 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.