ஜெயலலிதா திட்டமிட்ட கொலையா? ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சசிகலாவின் கணவர்!

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவை உடைக்க பாஜக கட்சி முயற்சி செய்து வருகிறார். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

தமிழகத்தில் அவர்களால் கால் ஊன்ற முடியாது. அப்படி எங்களை அழிக்க நினைக்கும் பாஜகவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அவரை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.

சசிகலாவை முதல்வராக்குவது குறித்து கட்சி எம்எல்ஏக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவை கொலை செய்து விட்டதாக கூறுபவர்களுக்கு வெட்கமில்லையா? ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஜெயலலிதா தெளிவான சிந்தனையோடு இருந்தார். ஜெயலலிதாவை 36 ஆண்டு காலம் எனது மனைவி தோளில் சுமந்தார் அவரைப் போய் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று அவதூறு பரப்புகின்றனர் என கொந்தளித்துள்ளார்.