மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலுக்காக சிறைக்கு சென்றவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் நிர்வாகி கோவன்.
இந்நிலையில் இவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜல்லிகட்டு இல்ல
இது டெல்லிக் கட்டு
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு
மாட்டை அடக்கி விட்டோம் அன்று தொட்டு
இனி வாடிவாசல் விட்டு விட்டு
மோடி அரசை அடக்கி காட்டு
காவிரியைத் தடுத்து எங்கள்
கழனியைக் கருக்கி, உழவன்
உயிர்களைக் குடித்து மண்ணைக்
கெடுத்தவனை எதிர்த்து மோது
தமிழினை அழித்து செத்த
சமஸ்கிருதம் திணித்து எங்கள்
பாடத்தை திரித்த மோடி
வேடத்தை கலைக்கிறோம் பார்
பொங்கலுக்கு விடுமுறை ரத்து நம்மை
சீண்டிப் பார்க்குது டெல்லிக்காத்து
வீரம் எங்கே, இங்கே காட்டு – காவிக்
காளையின் கொம்பை முறித்து வீழ்த்து.







