வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான, நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இதேவேளை, இராணுவம் தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்களை அகற்றி வருவதுடன் தளபாடங்களையும் அப்புறப்படுத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
மேலும்குறித்த காணியின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள நிலையில் சில தினங்களில் இக்காணிகள் உரியவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.