உச்சநீதின்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பதால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா என்ற மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையில், நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்ப்படுத்த வேண்டும் என பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பரமணிய சுவாமி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை தாரளமாக கொண்டு வாருங்கள்.
அதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோதும் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகாவில் ஆட்சியை முதலில் கலைத்துவிடுங்கள்.
அதே போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் அதை செய்யாத மத்திய பா.ஜ.க அரசையும் கலைத்து விட்டு பின்னர் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வாருங்கள் என சீமான் கூறியுள்ளார்.







