‘அடுத்த கைது நானே’ : கம்மன்பில ஆரூடம்!

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் சகோதரர் விமல் எவ்வித எழுதப்பட்ட ஆவணமும் இன்றியே கைது செய்யப்பட்டுள்ளார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

அரசுக்கு எதிரான எழுச்சியை அடக்குவதற்காகவே விமல் கைது செய்யப்பட்டார். இவ்வாறான செயல்களால் எழுச்சியை நிறுத்த முடியாது.

விமல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக என் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அம்பலாங்கொடை பொலிஸார் என்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

ஆனால் என்னை கைது செய்வதன் மூலம் எங்களது எழுச்சியை நிறுத்த முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.