அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ள வர்த்தக வலயத்திற்காக காணிகளை கையகப்படுவதற்கு எதிராகவும் மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதால், நாடாளுமன்றத்தில் இன்று அமளி ஏற்பட்டது.
அம்பாந்தோட்டை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தினேஷ் குணவர்தன நிலையியல் கட்டளை சட்டத்தின் 23 கீழ் 2 கேள்வியை ஒன்றை எழுப்பிய போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அம்பாந்தோட்டைக்கு கைத்தொழில் பேட்டை அவசியமில்லை என்றால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையெழுத்துடன் கூடிய யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
அப்படியான யோசனையை முன்வைத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதனையடுத்தே நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.