சர்க்கரைக்கு பதிலா வெல்லத்தை சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் அற்புத நன்மைகள் தெரியுமா?

இன்றைய தலைமுறைக்கு உணவிற்குப் பிறகு சாப்பிட பலவகையான மாற்றுக்கள் இருந்தாலும் இதில் எதுவும் பல பயன்களைத் தரும் வெல்லத்திற்கு இணையாகாது என்பதுதான் உண்மை.

எடையை குறைக்கும்:

வெல்லம் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான உணவு. இதில் காணப்படும் பொட்டாசியம் உங்கள் உடலில் நீர் தங்குவதை குறைத்து உடல் எடையை சரிவர பராமரிக்க உதவும். உங்கள் உணவில் வெல்லத்தை சேர்ப்பதன் மூலம் இனிப்பை உண்டாலும் உங்கள் எடையை கூடாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.

எனர்ஜியை தரும்:

சர்க்கரை இனிப்புகளை போலல்லாமல் வெல்லம் நேரடியாக உடனடியாக இரத்தத்தில் கலக்காமல் நீண்ட நேரம் சக்தியைத் தரக்கூடியது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்வது தடுக்கப்படும்.

இருமலை குணப்படுத்தும்:

நீங்கள் சளித்தொல்லை மற்றும் இருமலால் அவதிப்பட்டுவந்தால் வெல்லத்தை வெந்நீரில் அல்லது டீயில் கரைத்து அருந்துங்கள்.

மலச்சிக்கலை தடுக்கும்:

வெல்லம் உடலின் நொதிகளை ஊக்குவித்து உங்கள் ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

கல்லீரலின் நண்பன்:

இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பிற பண்டங்களை போலல்லாமல் வெல்லம் உங்கள் கலீரலை சுத்தம் செய்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கல்லீரலை பலமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் வலியைப் போக்கும்:

இதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் மூலம் வெல்லம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் குணப்படுத்தும்.

உடலுக்கு குளிர்ச்சி:

வெல்லம் உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும் வயிற்றை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுவதால் பல்வேறு நோய்களைத் தடுத்து கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு உணவுப் பொருளாக விளங்குகிறது.

ரத்த சோகையை தடுக்கும்:

இரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களை பராமரிக்க உதவுவதன் மூலம் வெல்லம் உடல் சோர்வுறுதலை தடுக்கும்.

இரத்த சுத்தி:

ஓரளவு வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி:

இதில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் கனீமத் சத்துக்கள் இயற்கை எதிர்வினைகளை எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன. வெல்லம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணைக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

புற்றுநோயைத் தடுக்கும்:

வெல்லத்தில் காணப்படும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள் தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது:

இதில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உடலில் அமிலங்களின் அளவை சரிவர பராமரிக்க உதவுவதால் இரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழி செய்கிறது.