ரஷியாவில் 8500 அடி உயரத்தில் டாய்லெட்: ஹெலிகாப்டரில் பறந்து வரும் டிஸ்யூ பேப்பர்!

ரஷ்யா நாட்டில் சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.

இந்தப் பகுதியில் வானிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதில் 4 வானிலை ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அங்கு டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக அபாயகரமான டாய்லெட் என அழைக்கப்படுகிறது.

சாலை வசதிகள் எதுவும் இல்லாத இம்மையத்திற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டுவரப்படுகிறது.