எப்படியான அழுத்தங்கள் வந்தாலும் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி நிறுத்தப்படமாட்டாது : அமைச்சர் சாகல ரத்நாயக்க

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை எப்படியான அழுத்தங்கள் வந்தாலும் நிறுத்த போவதில்லை என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ள காணிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அந்த காணிகள் குத்தகைக்கு மட்டுமே வழங்கப்படும்.

எனினும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார ஆசை கொண்டவர்களும் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.