பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்!!

பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிஜி தீவுகளின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நடி பிராந்தியத்தின் 227 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.

இதையடுத்து அப்பிராந்தியத்தில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அங்கு மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.