மேற்கு கனடாவின் கால்கரி விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவுக்கு 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை புறப்படத் தயாராக இருந்தது. இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன் சிறிது நேரம் முன்னர், விமானத்தை இயக்கவிருந்த பைலட் அளவுக்கு மிஞ்சிய குடிபோதையில் விமானத்தின் காக்பிட்டில் மயங்கி விழுந்தார்.
குடிபோதையில் விமானி மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் அளித்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அந்த பைலட் மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேறொரு விமானியை வைத்து அந்த விமானம் இயக்கப்பட்டது. பொறுப்பில்லாமல் பணிக்கு வந்த அந்த விமானி தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.







