மூங்கில் கதவுகளுக்குப் பதிலாக மின்சாரக் கதவு..!

ரயில் கடவைகளில் மணி ஒலியுடனான மின்சார கதவு அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் 300 இடங்களில் இவை பொருத்தப்படவுள்ளன. இதற்கான கேள்வி மனு தொடர்பான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 200 இடங்களுக்கு மின்சார வேலிகளை பொருத்துவதற்கான கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில் கடவைகளில் பயன்படுத்தப்படும் மூங்கில்களுக்குப் பதிலாக மணி ஒலியுடனான மின்சார கதவு அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இவ்வாறான கடவைகள் மொத்தமாக 670 உள்ளன. இந்த அனைத்து இடங்களுக்கும் 3 வருடங்களுக்குள் நவீன மின்சார கதவுகள் பொருத்தப்படும் எனவும் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.