மஹிந்தவை அவமானப்படுத்திய வாசுதேவ!

தனது ஆட்சியில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட அளவிற்கு இந்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்தவின் கருத்திற்கு வாசுதேவ நாணயக்கார கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வித்தியாசமான பதில் ஒன்றை வழங்கியிருந்தார்.

கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் “சாரின் வரவு செலவு திட்டத்தில் பொருட்களின் விலை குறைவடைவதற்கு பதிலாக நாய் உணவுகளின் விலை குறைப்பட்டதென்பது மக்களுக்கு இன்றும் நினைவில் உள்ளது…” என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவமானப்பட்ட மஹிந்த சிரித்தவாறு தனது பேச்சினை வேறு பக்கம் திசை திருப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.