சிறுநீரை அடக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? காரணம் இதுவாக இருக்கலாம்!

சிறுநீரை அடக்கமுடியாமல் வயதான ஆண்களும், பெண்களும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

யூரினரி இன்கான்டினென்ஸ் (Urinary Incontinence) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். சிறுநீர் கழித்தலில் கட்டுப்பாடு கொள்ள முடியாத நிலை, ஒருவர் தனக்கு சிறுநீர் வரும்போது அடக்கிக் கொள்ள முடியாமல் கசியவிட்டுவிடுவதைக் குறிக்கும்.

இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் தான் விரும்பாத நேரங்களில் சிறுநீரை கழித்து விடுவார். அதாவது எதிர்பாரதவிதமாக சிறுநீர் கசிந்து விடுவது. இந்த குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கே அதிகமாக காணப்படுகிறது.

அது ஏன் ஆண்களை விட பெண்களுக்கு இதன் தீவிரம் நிலையாக இருக்கிறது.

காரணம் கர்ப்பிணிப் பெண்கள், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்த பெண்கள், அறுவை சிகிச்சைகள், குழந்தைப் பேறு அல்லது மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பெண்களில் இந்த சிறுநீர் கட்டுப்பாடு பிரச்னையை உருவாக்குகின்றன. இந்த பிரச்சனை உடல் பருமனாலும் ஏற்படலாம்.

மேலும் இந்த பிரச்சனை கடும் பளுதூக்குதல், இருமல் மற்றும் கடின உடற்பயிற்சியினால் ஏற்படக்கூடும்.

இந்தக் குறைபாட்டை பெரும்பாலும் சரியான மருந்துகள் எடுப்பதன் மூலமும், இதனைக் கையாளும் பயிற்சிகள் மூலமும் மற்றும் நம்முடைய சொந்த முயற்சியினாலும் கூட கட்டுப்படுத்த இயலும். சிறுநீர்ப்பை மேலாண்மை திட்டமிடல் உங்களை குறிப்பிட்ட முறையிலும் நேரத்திலும் உங்கள் சிறுநீரை வெளியேற்ற உதவும்.

இதற்கேன பிரத்யேக பயிற்சி திட்டங்களை நீங்களும், உங்கள் மருத்துவரும் இணைந்து தேர்வு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவு திரவங்களை எடுத்துக் கொண்டு ஐ சி பி எனப்படும் உபகரணங்களை பயன்படுத்தி உங்கள் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒவ்வொரு 3 அல்லது நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை நீங்கள் விழித்திருக்கும் நேரங்களில் உங்கள் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை சுத்தமாக வெளியேற்றிவிட வேண்டும்.

மேலும் இந்த குறைப்பாட்டை போக்க யோகாவும் செய்யலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.