சுசந்திகாவுக்கு சிறப்பு நிபுணத்துவ வைத்தியர்களினால் சிகிச்சை!

சுசந்திக ஜெயசிங்கவின் உடல் நிலையில் முன்னேற்றம் கணப்படுவதாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதை கூறியுள்ளார்.

நாட்டுக்கு சிறப்பினைத் தேடித் தந்த ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவுக்கு சிறப்பு நிபுணத்துவ வைத்திய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

மேலும் தியதலாவை வைத்தியசாலையிலிருந்து உலங்குவானூர்தி மூலம் தேசிய வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சுசந்திகா ஜெயசிங்க அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.