இன்றைய ராசி பலன் 29-12-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில்  மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலை சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச  வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க  வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்:  பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.  புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர்களின்  வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தொட்டது  துலங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை  படைக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய  பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால்  உயரும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக்  கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப்  பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப்  போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்து போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உடல் நலம் பாதிக்கும்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்  செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புகழ், கௌரவம்  உயரும் நாள்.

  • மீனம்

    மீனம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து  சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதி பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.