லண்டனில் மர்மக் கொலையாளி?? காட்டிக்கொடுப்பாரா மஹிந்த??

மீண்டும் சூடு பிடித்துள்ள ஊடகவியளாலர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கினை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அது மஹிந்த கையிலே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இப்போது இந்த வழக்கில் மஹிந்த ராஜபக்ச மற்றும் லசந்த உரையாடிய தொலைபேசி பதிவுகள் வெளிவருகின்றன.

இவை மஹிந்த மீது உள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்பிவிட செய்யப்படும் முயற்சியாகவே நோக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வெளியான இரண்டாவது உரையாடல் பதிவில், கொலை செய்யப்பட உள்ள ஊடகவியளாலர்களின் பெயர்கள் வெளிநாட்டு தூதரகங்களுக்கு சென்றுள்ளதாகவும் உரையாடப்படுவதோடு, லசந்த தனக்கு ஏற்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் மஹிந்தவிடம் கூறுகின்றார்.

ஆரம்பத்தில் உரையாடல் தொடங்கும் போது இதனை நான் செய்திருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா என மஹிந்த வினவ அதற்கு இல்லை “நீங்கள் செய்திருக்கமாட்டீர்கள் எனத் தெரியும்” என்று லசந்த கூறுகின்றார்.

அதேபோல இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லசந்த கூறுவதோடு விரல் அடையாளம் மூலம் இதனை கண்டு பிடிக்கலாம் எனவும் கூறுகின்றார்.

அதற்கு செய்வோம் என மஹிந்த பதில் அளித்ததோடு, சில சமயம் அது அத்தனை சாத்தியம் இல்லை. ஒரு சில தொலைபேசி அழைப்புகள் லண்டன் போன்ற வெளிநாட்டில் இருந்து கூட வருகின்றது.

அதனால் அதனை கண்டுபிடிக்க முடியாது உள்ளது என்ற பதிலையும் அளிக்கின்றார். இதன் மூலம் அந்த கொலை அச்சுறுத்தல் வெளிநாட்டில் இருந்தும் வந்திருக்கலாம் என்ற பார்வையை மஹிந்த கொண்டுவந்துள்ளார்.

மேலும், மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச குழு இலங்கை வரும் போது இவ்வாறான பிரச்சினைகள் எழுப்பப்படுவது முறையல்ல எனவும் லசந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ தளத்திலும் இந்த விடயம் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பில் தாங்கள் ஆராய வேண்டும். நீங்களே பாதுகாப்பு அமைச்சின் பொருப்பாளர் எனவும் லசந்த கூறுகின்றார்.

ஆக மொத்தம் லசந்த கொலை செய்யப்படப்போவது குறித்து லசந்தவே மஹிந்தவிடம் பேசியுள்ளார். இந்த உரையாடலின் பின்னணி குறிவைப்பது கோத்தபாயவையே,

அப்போது பாதுகாப்பு தொடர்பிலாக அனைத்து விடயங்களும் கோத்தபாய பொறுப்பிலேயே இருந்த காரணத்தினால் என கூறப்படுகின்றது.

இதேவேளை ஆரம்பத்தில் வெளியான உரையாடலில் “கொலையாளியையும் காப்பாற்று ம் வழக்கம் உடையவரே நீங்கள் என லசந்த கூற அதனை மஹிந்தவும் ஒப்புக் கொள்கின்றார்.

வெளியாகி உள்ள இரு உரையாடல் பதிவுக்கும் தொடர்பு உண்டு, அதாவது லசந்தவை கொலை செய்த நபர் யார்? என்பது மஹிந்தவிற்கு தெரிந்த காரணத்தினால் அதனை வெளிப்படுத்தும் முயற்சியே இப்போது நடைபெற்று கொண்டு வருகின்றது.

ஒரு வேளை இது கோத்தபாயவிற்கு வைத்த பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஆக மொத்தம் லசந்தவின் கொலை மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமானவர்களால் நிகழ்த்தப்பட்டு அதனை எப்படியாவது வெளிக்கொண்டு வரும் முயற்சிக்கான நாடகமே இப்போது நடைபெற்று கொண்டு வருகின்றது.

மேலும் இதனால் கூடிய விரைவில் குற்றவாளி அல்லது குற்றவாளி என ஒரு நபர் சிக்குவார், அப்போது முடிவுக்கு வரும் இந்த வழக்கு ஆனாலும் உண்மைக் குற்றவாளி சிக்குவாரா என்பதே இப்போதைய கேள்விக்குறி எனவும் கூறப்படுகின்றது.