வங்காளம் தேச தொடருக்காக கிறிஸ்துஸ் விழாவை புறக்கணித்த நியூசி. அணி!

வங்காள தேசம் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

நாளை ‘பாக்சிங் டே’ அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணி கடைசியாக 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வங்காள தேச அணியை வீழ்த்தியிருந்தது. அதற்கு முன் 2013-ல் நடைபெற்ற தொடரை 3-0 எனவும், 2010-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை 4-0 எனவும் நியூசிலாந்து இழந்திருந்தது.

இதனால் வங்காள தேச அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதால், நியூசிலாந்து வீரர்கள் கிறிஸ்துமஸ் விழாவை இன்று கொண்டாடவில்லை. அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.