இன்றைய ராசி பலன்கள் 26.12.2016

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய துவங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதியை மேம் படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்து போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: எதையும் திட்டமிட்டு செய்ய பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுகொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

– See more at: http://astrology.dinakaran.com/rasi-index.asp#sthash.o9FOyPGb.dpuf