வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது!

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் கடமை புரியும் இளைஞனை கடத்திச் சென்று தாக்கி வீதியில் விட்டுச் சென்றமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய பேருந்தும் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட இளைஞன் 26 வயதான த.சுபராஜ் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா பொலிசார், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்துள்ளதுடன், கடத்தியதாக கூறப்படும் பேருந்தினையும் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.