மகாநதி என்ற பெயரில் வெளியாகும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக வந்த செய்திகளுக்கு படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்கிற பெயரில் தெலுங்கில் படமாகிறது. இந்தப் படத்தில் சமந்தா நடிக்கிறார்.
இதையடுத்து சாவித்திரி வேடத்தில் சமந்தா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழு இத்தகவலை மறுத்துள்ளது.
இப்படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளது உண்மைதான். ஆனால் சாவித்திரி வேடத்தில் அவர் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாகப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் பார்வை வழியாக சாவித்திரியின் வாழ்க்கை சொல்லப்படும். சாவித்திரி வேடத்தில் நடிக்கக்கூடிய நடிகை இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சாவித்திரி வேடத்தில் நடிக்க நித்யா மேனன், வித்யா பாலன் ஆகியோரிடம் பேச்சு நடத்தி வருகின்றார்களாம்.







