வீடியோ: புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம் : 5 ஊழியர்கள் உயிரிழப்பு!

கொலம்பியாவின் பியூர்ட்டோ கரேனோவில் உள்ள ஜெர்மன் ஒலனோ விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் போயிங் 727 என்ற சரக்கு விமானம் தலைநகர் பொகோட்டாவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் ரன்வேயில் ஓடி உயரே கிளம்பிய சிறிது நேரத்தில் கீழ்நோக்கி வரத் தொடங்கியது.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், விமானத்தில் பயணித்த 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். தொழில்நுட்ப வல்லுநர் பிராவா மட்டும் உயிர்பிழைத்தார். அவர் பாதுகாப்பு கவசம் அணிந்துகொண்டு, விமானத்தில் இருந்து கீழே குதித்திருக்கலாம் என தெரிகிறது. அவரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விமானம், புறப்பட்டவுடன் தரையை நோக்கி வருவதை கவனித்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.