தமிழகம் கடந்த இரு மாதங்களாகவே பரபரப்பாகவும், மிகுந்த குழப்பத்துடனும் தான் இருக்கிறது, காரணம் முதல்வர் ஜெயலலிதா மரணம்.
முதல்வர் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக அவருக்கு எப்பொழுதும் உதவிகரமாக 4 பணிப்பெண்கள் கூடவே இருப்பார்கள்.
அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை மிகுந்த கவனத்துடன் அவர் எங்கு சென்றாலும் கூடவே செல்வதோடு, ஜெ. உண்ணும் உணவு அவருக்கு ஆரோக்கியமானதா? என்பது வரை அவர்கள் கவனித்து வந்தார்கள்.
அந்த பணிப்பெண்கள் நால்வரும், ஐந்து வருடங்களுக்கு முன் மிகத்துல்லியமாக தேர்வு செய்யப்பட்டு கார்டனுக்குள் வந்தார்கள்.
ஜெ.வை தவிர வேறு எவர் உத்தரவிட்டாலும் செய்யக் கூடாது என்பது அவர்களுக்கான சட்டம்.
இவர்கள் எப்பொழுதும் தமிழக உளவுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி ஜெ.வீட்டில் அவருக்கும், அவர் தோழி சசிகலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சசிகலா ஜெ.வை கீழே தள்ளிவிட்டதாகவும், அப்போது பணியில் இருந்த பணிப்பெண் கல்யாணி என்பவர் தான் ஜெயலலிதாவை காப்பாற்ற முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தற்போது கல்யானி என்பவரும் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது மாயமாகவே உள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து பணிப்பெண்கள் 4 பேருக்கும் என்ன ஆனது, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வு எடுத்து வரும் கொடநாடு பங்களா விற்கப்படுவதாகவும், இதற்காக நிலசர்வேயர்கள் அளவெடுப்பதோடு, வெளிநாட்டு தொழில் அதிபர்கள் பார்வையிட்டுச் செல்வதாகவும் செய்திகள் பரவுகிறது.







