தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 20 நாட்கள் விசேட ஜூரி சபையால், கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் இதன்போது 25 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
பிரதிவாதிகள் சார்பில் சாட்சியமளிப்பதற் காக நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்தனவிற்கு நேற்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சேனாபதி லியனகே, நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 31 ஆவது சாட்சியாளராக நேற்று சாட்சியம் வழங்கியிருந்தார்.
நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு, ஆயுதமேந்திய புலனாய்வுப் படையினர் கருணா அம்மான் தரப்பினருக்கு வழங்கிய ரி 56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இராணுவப் படையணி நிலையத்தின் ஆயுதமேந்திய புலனாய்வுப் பிரிவினரால், நட்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட ரி56 ரக துப்பாக்கியே இந்த கொலைக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக அவரும் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







