ஜி.வி.க்கு ஜோடியாகும் மிஸ் கேரளா!

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிசியான நாயகனாகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது ‘அடங்காதே’, ராஜீவ் மேனன் இயக்கும் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்று 4G. சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை வெங்கட் பாக்கர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்க காயத்ரி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த காயத்ரி இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.