மைத்திரி – ரணில் நிர்வாகம், சீனாவுடன் கொண்டுள்ள நட்பில், இந்தியாவின் பிரதமர் மோடி குழப்பத்தை உருவாக்கியதாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த உறவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.
இதன் காரணமாகவே 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இந்தியா எதிர்க்கட்சிக்கு உந்துதலை அளித்தது என்றும் கோட்டாபய குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்களில் இந்தியா திருப்திக்கொள்ளவில்லை.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில், ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட 1.4பில்லியன் டொலர்கள் பெறுமதியான போட்சிட்டி அபிவிருத்தி திட்டத்தை ரத்துச்செய்ய இந்தியா கோரியதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இது நியாயமற்ற செயல் என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்







