அப்போது நான் இல்லாமல் போய் விட்டேனே..! ஷேவாக்கின் சோகம் இதுதான்

கருண் நாயர் முச்சதம் அடித்த போது அதை என்னால் நேரில் காண முடியாமல் போய்விட்டது என்று ஷேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.

இது குறித்து முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் கூறுகையில், இளம் வீரர் ஒருவர் இப்படி துடுப்பெடுத்தாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

எனது வருத்தம் என்னவென்றால் அவர் முச்சதம் அடிக்கும் போது சேப்பாக்கம் மைதானத்தின் கமெண்டரி பாக்ஸில் நான் இல்லை. என்னால் அதை பார்க்க முடியாமல் போய்விட்டது.

போட்டிக்கு முன் கருண் நாயர் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் ஒரு இந்திய வீரர் இந்த சாதனையை நிகழ்த்த கண்டிப்பாக 12 வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்க கூடாது.

எனது சாதனையை முறியடிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அணியின் வெற்றிக்காக டிக்ளேர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனி நபர் சாதனைய விட இந்தியா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியமானது.

முதல் தரப் போட்டியில் கூட அவர் 300 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

மீண்டும் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்த அவருக்கு திறமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.