பைரவா படத்தில் இப்படி ஒரு பாடலா? வெளியிட்ட பிரபலம்!

பைரவா படத்தின் பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஏனெனில் முதன் முறையாக விஜய்-சந்தோஷ் நாரயணன் கூட்டணி இணைந்துள்ளதே இதற்கு காரணம்.

மேலும், இப்படத்தின் பாடல்கள் குறித்து கவிஞர் வைரமுத்து ‘ “இதோ இப்போது இன்னும் இரண்டு பாடல்களை உங்கள் கண்களுக்குத் தருகிறேன். ஒன்று விஜய் – கீர்த்திசுரேஷ் பாடும் இருகுரல் காதல் பாடல். இன்னொன்று உச்சகட்டத்தில் எதிரியோடு மோதுவதற்கு முன்னால் ஊர்கூடிப் பாடும் போர்ப் பாட்டு” என தெரிவித்துள்ளார்.